THF Announcement: E-books update:09/10/2016: சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்

2 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய  தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:   சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்
ஆசிரியர்:     வே.மகாதேவன் எம்.ஏ
பதிப்பு: காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழாக் கமிட்டி, சென்னை
 ​



நூலைப்பற்றி:
இந்த நூலில் முதலாம் ராஜராஜன்  தஞ்சை பெரிய கோயிலுக்குத் தானே அளித்த தானங்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டுக்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தும் தென்னிந்திய சாசனத் தொகுதியில் உள்ள வண்ணம் இந்த நூலில் அச்சிடப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கள் மட்டுமன்றி கோயில் சித்திரங்கள் புகைப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. 300 பக்கங்கள் கொண்ட விரிவான ஒரு நூல் இது. கல்வெட்டு பயில விரும்பும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் உதவும் நூல் என்பதில் ஐயமில்லை. 

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 458

மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.கௌதம சன்னா
இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்திற்காக வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

மறுமொழிகள்

2 comments to "THF Announcement: E-books update:09/10/2016: சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்"

இன்னம்பூரான் said...
October 9, 2016 at 4:31 AM

நமது சேகரத்தின் சிகரம் போன்றது இந்த அருமையான நூல். திரு கெளதம சன்னா அவர்களுக்கும் சுபாஷிணிக்கும் என் கனிவான பாராட்டுகள். 'இஞ்சிசூழ் தஞ்சை ஶ்ரீராஜராஜச்வரத்தை' காணக் கண் கோடி வேண்டும் என்பதால், மூன்று வருடங்கள் முன்னால், தஞ்சையில் மூன்று நாள் முகாம் போட்டு, கல்வட்டு வல்லுனர்களாலும், பேராசியர்களாலும் வழி நடத்தப்பட்டு, மன நிறைவு பெற்றதும், அடுத்த வருடம் குடும்பத்துடன் சென்று அவர்களை வழி நடாத்தியதையும், நினத்து நிஐத்து மேலும் மகிழ்ந்தேன். புத்தகத்தை பாதுகாத்த ஶ்ரீ.விஜயராகவ மன்றம் பற்றி மேலும் அறிய அவா.
நன்றியுணர்வுடன்,
இன்னம்பூரான்
9 10 2916

Sulur Theivannan Seshagiri said...
October 10, 2016 at 3:06 AM

மின்னூல்கள், கல்வெட்டுக்கள் பகுதிகளைத் திறந்து பார்க்க இயலவில்லை.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES