THF Announcement: E-books update:9/6/2016 *அணுசக்தி பிரச்சனைகளும் மெய்ப்பாடுகளும்

2 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய அறிவியல் தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  அணுசக்தி பிரச்சனைகளும் மெய்ப்பாடுகளும்
ஆசிரியர்:   சி.ஜெயபாரதன், கனடா



நூலைப் பற்றி நூலாசிரியர் தரும் குறிப்பு:
இருபதாம்நூற்றாண்டில் அணுயுகமும், அண்ட வெளியுகமும்இரண்டாம்உலகப்போருக்குப்பின்தோன்றிப்பெருமளவில் 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து முன்னேற்றம்அடைந்து வருகின்றன.  அணுஆயுதங்களும், அணுசக்திஆய்வுக்கூடங்களும், அணுமின்சக்திநிலையங்களும்உலகமெங்கும்பன்மடங்குபரவி இயங்கிவந்துள்ளன. வயது முதிர்ந்த பழைய அணுவியல் ஆய்வுக் கூடங்கள், அணுசக்தி நிலையங்கள் மூடப்படுகின்றன.அண்டவெளித்தேடலில் விண்வெளி ஆய்வுக்கப்பல்களை அனுப்பிப்பரிதியின்கோள்களைச் சுற்றி அருகில் ஆராய்ந்து, அடுத்து நிலவிலும் மனிதர் தடம்வைத்துப்பாதுகாப்புடன்மீண்டுவிட்டனர!  

பொறியியற்பட்டம்பெற்றபிறகு 43 ஆண்டுகளாக பாரத,  கனடாஅணுசக்திநிலையங்களில்தொடர்ந்துபணியாற்றிப் பெற்ற என் அனுபவத்தின் பயனே நான் இந்த நூலைஎழுத ஊன்று கோலாகஇருந்தது.  இந்தநூலில் அணுமின்சக்திபற்றியும், அவற்றின்கதிரியக்கம்பற்றியும், அணுமின்நிலைய  விபத்துகள், அபாயங்கள்பற்றியும் அணுஆயுதக்கேடுகள்பற்றியும், கதிரியக்க விளைவுகள் பற்றியும், பாதுகாப்பான கதிரியக்கக் கழிவுகளின்புதைப்புபற்றியும் கூறநான்ஓரளவுமுற்படுகிறேன். 

இக்கட்டுரைகள்யாவும்அகிலவலைத்தளங்களானதிண்ணை.காம், பதிவுகள்.காம், வல்லமை.காம்தமிழ் இதழ்களில் 2002 முதல் 2015 வரைவெளியிடப்பட்டவை. 

உலகநாடுகளில்இரண்டாம்உலகப்போருக்குமுன்னும், பின்னும்நிகழ்ந்தமுக்கிய அணுவியல் விஞ்ஞானச்சம்பவங்களே இந்நூலில்எடுத்தாளப்பட்டுள்ளன.   

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 447

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

மறுமொழிகள்

2 comments to "THF Announcement: E-books update:9/6/2016 *அணுசக்தி பிரச்சனைகளும் மெய்ப்பாடுகளும்"

இன்னம்பூரான் said...
June 10, 2016 at 7:13 AM

புத்தகத்தை ஓரளவு புரட்டிப்பார்த்தேன். யானறியாத பல தகவல்கள் கிடைத்தன. இது அருமையான வரவு. ஐ.ஏ.எஸ். மாணவர்கள் படிக்கவேண்டும்.
இன்னம்பூரான்

Unknown said...
November 9, 2021 at 3:14 AM

நான்இன்னும்படிக்கவில்லை.அவசியம்.படிக்கின்றேன்.நன்றி சார்

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES