திருமுறைகள் இந்தியில்

0 மறுமொழிகள்



2009/11/5 Venkatachalam Subramanian <v.dotthusg@gmail.com>
ஓம்.
பேரன்புடையீர்!
திருவாளர் மறவன்புலவு கே.சச்சிதானந்தம் அவர்களின் மடலைக் காண்க:
பன்னிறு திருமுறைகளை இந்த தளத்தினில் காணலாம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்


---------- Forwarded message ----------
From: Maravanpulavu K. Sachithananthan <tamilnool@gmail.com>
Date: 2009/11/5
Subject: [MinTamil] திருமுறைகள் இந்தியில்
To: "Subramanian, Nagarajan (Subra IPD)" <Subra.N@fmcti.com>


வணக்கம்.
திருமுறைகளையும் மெய்கண்ட சாத்திரங்களையும் இந்தி மொழிக்கு மொழிபெயர்க்கும் முயற்சி, கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிற தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

காசிப் பல்கலைக் கழகத்தில் சிவஞானபோதம் இந்தி மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அதனைத் தேவாரம் மின்னம்பல தளத்தில் சேர்க்க ஆவன செய்துள்ளேன். தட்டச்சாகி வருகிறது.

திருமந்திரம் முழுவதையும் 1997இல் வார்தாவில் காந்தி ஆச்சிரமத்தார் இந்தி மொழிபெயர்ப்பாக வெளியிட்டனர்.

திருமுறைகள் முழுவதையும் மொழிபெயர்க்குமாறு கொல்கத்தா, சாந்திநிகேதனத்தார் 1995இல் சென்னையில் இருந்து பேரா. சுந்தரத்தை அழைத்து, கொல்கத்தாவில் 3 ஆண்டுகள் தங்கவைத்தனர். அவர்,1,4,5,6,7,8 (திருவாசகம்) திருமுறைகளை இந்திக்கு மொழிபெயர்த்தார். அவரை அழைத்த பேராசிரியர் காலமாகிவிடவே, பிறர் ஆர்வம் காட்டாத நிலையில் அவர் சென்னை திரும்பினார். 

திருவாச இந்தி மொழிபெயர்ப்பை அக்காலத்தில் சாந்திநிகேதன் வெளியிட்டது. 

சுந்தரர் தோவாரத்தை வார்தா காந்தி ஆச்சிரமம் வெளியிட்டது. 

4,5,6 திருமுறைகளை பாடலிபுரப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

1 திருமுறை கையெழுத்துப் படியாக உள்ளது.

11ஆம் திருமுறை திருமுருகாற்றுப்படையைத் திரு பாலசுப்பிரமணியம் செய்து வைத்திருக்கிறார்.

அருட்செல்வர் நா. மகாலிஙகம் பெரிதும் முயன்று, வண்ணப் படம் ஒரு பக்கம் கதை ஒரு பக்கம் வந்த பெரியபுராணம் நூலை இந்தியிலும் பலவேறு மொழிகளிலும் பதிப்பித்துள்ளார்.

பேரா. இரபீந்திரநாதர் சேத்து என்பர் மூலம் திருமுறைகளில் தேர்ந்த பாடல்களை இந்திக்கு மொழிபெயர்க்க, பல தொகுதிகாளாக அருட்செல்வர் நா. மகாலிங்கம் பதிப்பித்துள்ளார். அந்தப் பதிப்பை அக்காலத்தில் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.

இவை எனக்குத் தெரிந்த தகவல். வேறு தகவல் தெரிந்தோர் சொல்லியுதவுக.

மகிழ்ச்சியான செய்தி என்னவெனில், 1, 4, 5, 6 ,7 8 (திருவாசகம்), 10 ஆகிய திருமுறைகளின் இந்தி மொழிபெயர்ப்பு விரைவில் www.thevaaram.org  தளத்தில் ஏறும். 1, 8, 10 ஆகியனவின் எணினிப் படி இல்லை. 4,5,6,7 களுக்கு எண்னிப் படி உண்டு. எணினிப் படி இல்லாதனவற்றை எணினியாக்குகிறேன்.
  
இப்பணிகளுக்கான செலவுகளை நன்கொடையாளர்களாகிய சிவனருட்செல்வர்கள் ஏற்று வருகிறீர்கள்.

நன்றி
 

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

--~--~---------~--~----~------------~-------~--~----~
 "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~----------~----~----~----~------~----~------~--~---



மறுமொழிகள்

0 comments to "திருமுறைகள் இந்தியில்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES